ஓம் சாய் ஜோதிட தீர்வுகள் மையம் - கோவா
astrologer in goa, best astrologer in goa, k.p astrologer in goa, om sai astrology solutions astrologer in goa, kp best astrologer in goa
Famous astrologer in goa - best astrology service in goa Famous astrologer in goa - best astrology service in goa Famous astrologer in goa - best astrology service in goa Famous astrologer in goa - best astrology service in goa
 
 

ஜோதிட ஆதித்யா திரு. சொக்கலிங்கம் கிருஷ்ணசாமி பற்றி

astrologer in goa- best astrologer in goa
ஜோதிட ஆதித்யா திரு. சொக்கலிங்கம் கிருஷ்ணசாமிy தென் இந்தியாவில் உள்ள ஒரு பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தார். அவர் பல புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து பாரம்பரிய ஜோதிட முறைகளை கற்றவர்.

திரு. சொக்கலிங்கம் கிருஷ்ணசாமி 15 வருடங்களாக தென்னிந்தியாவிலும் கோவாவிலும் ஜோதிட சேவை செய்து வருகிறார்

திரு.தேவராஜ் அவர்களிடம் இருந்து சார ஜோதிடம் ( KP Stellar) ஜோதிட முறைகளை கற்று அறிந்தார் . தற்பொழுது ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சார ஜோதிடம் ( KP Stellar) முறையில் ஜோதிட சேவை செய்து வருகிறார்.

ஜோதிட தீர்வுகளை நேரிலோ அல்லது இணையத்தின் மூலமோ அறிந்து கொள்ளலாம் , உங்கள் விவரங்களை omsaiastrologysolutions@gmail.com என்ற ஈமெயில் அனுப்பவும்

சார ஜோதிடம் பற்றி திரு. தேவராஜ் கூறுவது
ஜோதிட சாஸ்திரம் இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியது. ஒன்று ஜாதக கணிதம். மற்றொன்று கணித்த ஜாதகத்திற்கு பலனை நிர்ணயம் செய்தல். முதல் பிரிவான ஜாதக கணிதத்தை விட, அடுத்த பிரிவான ஜாதகத்திற்கு பலனை காண்பது என்பது சற்று கடினமான செயல்.
ஒரு ஜாதகத்தை ஒரு குறிப்பிட்ட பஞ்சாங்கத்தை கொண்டு (வாக்கியம் அல்லது திருகணிதம்) ஒரு ஜோதிடர் கணிப்பதாக வைத்து கொள்வோம். அதே பஞ்சாங்கத்தை கொண்டு எத்தனை ஜோதிடர்கள் அந்த ஜாதகத்தை கணித்தாலும், ஒரே மாதிரியான கணிதமே அந்த ஜாதகத்திற்கு அமையும். இவ்வாறு கணிக்கப்பட்ட இந்த ஜாதகத்திற்கு பலனை காணும் போது பலனும் ஒரே மாதிரியாக தானே வர வேண்டும் அப்படி ஒரே பலனை அந்த ஜாதகத்திற்கு நிர்ணயிக்க முடியுமா என்பதை மிக பெரிய கேள்வி குறியாக ஜோதிட துறை தன்னுள் வைத்துள்ளது என்பதை நம்மால் மறுக்க முடியாது.
ஒரு ஜாதகத்தின் கணிதத்தை ஒரே மாதிரியாக கணித்த அத்தனை ஜோதிடர்களும், பலனை நிர்ணயிப்பதில் ஏன் முற்றிலும் முரண்பாடான கருத்துக்களை அந்த ஜாதகத்திற்கு முன்வைக்கிறார்கள் என்பதை அவசியம் வாசகர்களாகிய ஜோதிட ஆர்வலர்கள் சிந்திக்க வேண்டும்.
உதராணமாக ஜோதிட துறையில் இரண்டு முதல் நான்கு தலைமுறையாக (பாரம்பரியம் மிக்க) இருக்கும் இரண்டு ஜோதிட அறிஞர்களிடம் ஒரு ஜாதகத்தை கொடுத்து பலன் கேட்டால் இரண்டு அறிஞர்களும் அந்த ஜாதகத்திற்கு முற்றிலும் மாறுபட்ட பலனையே தரும் வண்ணம் நமது பாரம்பரிய ஜோதிட முறை உள்ளது என்பதை மிகவும் வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன்.
மேற்கண்ட இரண்டு ஜோதிட அறிஞர்களும் ஜோதிட துறையில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தாலும் கூட ஒருவர் கூறும் பலனை மறுத்து மற்றவர் கூறுவார். அவ்வாறு கூறும் அவர் தன்னுடைய சொந்த கருத்தை இங்கு கூறுகிறாரா என்றால் அதுவும் இல்லை. ஜோதிட துறையில் நன்கு அங்கீகரிக்கப்பட்ட பழம்பெரும் ஜோதிட நூலையே ஆதாரம் காட்டி தன்னுடைய கருத்துக்கு வலு சேர்ப்பார்.
அதே நேரத்தில் அடுத்த ஜோதிடரும் சற்றும் சளைக்காமல் வேறு ஒரு பழம்பெரும் ஜோதிட நூலை ஆதாரம் காட்டி தன்னுடைய கருத்துக்கு வலு சேர்ப்பார். அதே ஜாதகத்தை மூன்றாவதாக ஒரு அறிஞரிடம் கொடுத்து பலனை கேட்டல் முதலில் பலனை நிர்ணயித்த இரண்டு ஜோதிட அறிஞர்களின் கருத்தை முற்றிலுமாக மறுத்து புதிய பலனை வேறு ஒரு பழம்பெரும் ஜோதிட நூலையே ஆதாரம் காட்டி பலனை நிர்ணயம் செய்வார்.
மேற்கண்ட மூன்று ஜோதிட அறிஞர்களும் ஜோதிடத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள் என்பதும் பாரம்பரிய வழியில் வந்ததனால் நீண்ட அனுபவம் உடையவர்கள் என்பதாலும் கூட ஏன் ஒரே மாதிரியான பலனை இவர்களால் கூட நிர்ணயம் செய்ய முடியவில்லை? மேலும் ஒரே சாதாரண வாடிக்கையாளர் தன்னுடைய ஜாதகத்தை இந்த மூன்று அறிஞர்களிடம் காட்டி பலனை காண முற்பட்டால் அந்த வாடிக்கையாளர்களின் நிலை என்னவாகும் என்பதை வாசகர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்.
இதில் மேலும் நாம் மிகவும் வருத்தப்பட (அல்லது வெக்கி தலைகுனிய) வும் வாய்ப்புள்ளது. அதி என்னவெனில் அந்த வாடிக்கையாளர் தன்னுடைய ஜாதகத்தை முதலில் அந்த மூன்று ஜோதிட அறிஞர்களிடம் (தனித்தனியாக) காட்டி, அந்த மூன்று அறிஞர்களும் வெவ்வேறு பலனை நிர்ணயம் செய்ததில் திருப்தியடையாமல் சில மாதங்கள் கழித்து அதே ஜாதகத்தை அதே மூன்று அறிஞர்களிடம் மீண்டும் காட்டினால் வாடிக்கையாளரின் நிலை என்னவாகும்?
முதன்முதலில் அந்த ஜாதகத்தை பார்த்து கூறிய அதே பலனை அந்த மூன்று ஜோதிடர்களும் மீண்டும் கூறுவார்களா என்பது அடிக்கடி தன்னுடைய ஜாதகத்தை நிறைய ஜோதிடர்களிடம் காட்டி இருக்கும் வாசகர்களுக்கு நன்கு தெரியும். மேற்கண்ட தகவல்கள் ஜோதிடத்தை கடுமையாக போர்குணத்துடன் எதிர்க்கும் நாத்திகர்களுக்கு போர்வாளாக அமையும் அதே நேரத்தில் அந்த போர்வாளை எதிர்கொள்ள ஒரு சரியான கேடயத்தை நம்மை போன்ற ஜோதிடர்கள் அவசியம் இனியாவது தேடி கொள்ள வேண்டும் என்பது இந்த சிறியவனின் தாழ்மையான கருத்து.

 

தொடர்புகொள்ள

"Jothida Athithya"
Chockalingam Krishnasamy


Omsai Astrology Solutions
H.No:1146, Ground Floor,
2nd BAIRO, Opposite Canara Bank(St. Cruz Branch),
St.Cruz, Tiswadi Taluka
GOA-403005

Contact: +91 9822100026
Email: omsaiastrologysolutions@gmail.com
Web: www.omsaiastrologysolutions.com

ஆலோசனைக்கு முன்பதிவு செய்யவும்

 
முகப்பு: ஜோதிடர்: ஜோதிட சேவைகள்: புகைப்படங்கள்: தொடர்புக்கு
All Rights Reserved - © 2022 OMSAI ASTROLOGY SOLUTIONS.